search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கமல்ஹாசன் எதிர்ப்பு"

    ஐ.ஏ.எஸ். தேர்வில் செய்யப்பட்டிருக்கும் மாற்றம் கிராமப்புற இளைஞர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று கமல்ஹாசன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். உள்ளிட்ட மத்திய அரசுப் பணிகளுக்கான தேர்வாணையம் என்பது அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு எவ்வித சார்பும் இன்றி, அனைத்து பணிகளுக்கும், யு.பி.எஸ்.சி. தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களை பணியாளர்களாக நியமனம் செய்கிறது.

    ஆனால் தற்பொழுது பிரதமர் அலுவலகத்தால் பரிந்துரை செய்யப்பட்டிருக்கும் முறையில் ‘‘பவுண்டேசன் கோர்ஸ்’’ மதிப்பெண்களை, யு.பி.எஸ்.சி.யின் தேர்வு மதிப்பெண்களுடன் சேர்த்து, இறுதி நியமனப்பட்டியல் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதன்மூலம் பணியாளர் நியமனம் தேர்வு மற்றும் தர அடிப்படையில் மட்டும் நடைபெறாமல் ஒரு சில பேராசிரியர்கள் மற்றும் நிர்வாகிகளின் தலையீட்டுக்களுடன் நடைபெறுவதற்கு வழிவகுக்கும்.

    கிராமப்புற இளைஞர்கள் மற்றும் எளிமையான பின்புலத்தில் இருந்து தேர்ச்சி பெறுகின்ற இளைஞர்கள் பாதிப்புக்குள்ளாவார்கள். இந்த மாற்றம் சில உயர் நிலையிலிருப்பவர்கள். தங்களைச் சார்ந்தவர்களுக்கு சலுகையளிப்பதற்கும் வழிவகுக்கும்.

    ‘‘பவுண்டேசன் கோர்ஸ்’’ எனும் இந்த பயிற்சியில் இந்தி மொழித்தேர்வும் நடைபெறுவதால் இந்தி மொழி பேசாத இளைஞர்களுக்கு பிரச்சினைகள் ஏற்படும். ‘‘பவுண்டேசன் கோர்ஸ்’’ என்பது முசோரியில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி தேசிய நிர்வாக அகாடமியைத் தவிர்த்து மேலும் 3 இடங்களில் நடைபெறும். பரிந்துரைக்கப்பட்டிருக்கும் மாற்றத்தின் மூலமாக அனைத்து இடங்களிலும் உள்ள தேச்சி பெற்றவர்களை சரிவர மதிப்பீடு செய்ய முடியாது.

    1978-ல் கோத்தாரி கமிட்டியால் பரிந்துரை செய்யப்பட்டிருந்த இதுபோன்ற மாற்றத்தை அன்றைய ஜனதா கட்சி அரசு நிராகரித்தது குறிப்பிடத்தக்கது. எனவே மத்திய அரசு நடப்பில் உள்ள யூ.பி.எஸ்.சி தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். உள்ளிட்ட பல்வேறு அகில இந்திய பணிகளுக்கு நியமிக்கும் முறையிலும், அதன் அடிப்படையில் அவர்கள் பணியாற்றும் மாநில ஒதுக்கீட்டு முறையிலும், எவ்வித மாறுதல்களும் செய்யக்கூடாது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×